ஜெயஸ்ரீ ஷங்கர்

Monday, May 30, 2016

அழகே...அழகே.....என்னோடு வா..!


முடியில்லாவிட்டால் மூளை இருந்தும் பிரயோஜனமில்லை போல....! பார்வைகளே சொல்லும்....சொட்டைத் தலையா, பட்டைத் தலையா, ப்ளே கிரௌண்ட் மண்டையா, வழுக்கை தலையா, என்று பலவித பட்டைப் பெயர்கள் வைத்து ராஜ மகுடம் சூட்டுவார்கள் பாருங்கள்...! அதற்கே ஒரு கிரீடம் கொடுக்க வேண்டும். முடி இருக்கறவனுக்கு மூளையே இல்லாட்டாலும் ராஜாபார்வை பார்ப்பான்.அதுவும் இப்போ ஐ டி கல்ச்சர் வந்தாச்சு....வீதிக்கு வீதி அவைகளோட டென்ஷனை வைத்து பிழைப்பு நடத்த காளான்கள் போல "ஹேர் ட்ரீட்மென்ட்" "ஸ்பா " அது இதுன்னு வித விதமான பெயர்களில் மின்விளக்குப் பலகைகள்....பக்கத்தில் சென்று கொஞ்சம் விலை விசாரித்தால் தெரியும்.....அவர்கள் நமக்கு நாலு முடியை வைத்து விட்டு நம் பர்ஸை மொட்டை அடித்து விடுவார்கள் என்பது. குறைந்தது பத்தாயிரம்...அதிக பட்சம் ஒரு லட்சத்துக்கும் மேலே...பேசாமே முடி போச்சு ....போனால் போகட்டும் போடா.....இந்த பூமியில் முடியினால் ஆவது என்னடா...ன்னு பாடிக்கிட்டே வர வேண்டியது தான்.  இருந்தும்...இணையம் இருக்கே...உபாயம் சொல்லாமல் போகாது. சித்தர்கள் சொன்ன மூலிகை ரகசியங்கள்....வேரின் வித்தகங்கள்...என்று ஏகப்பட்ட விஷயங்கள்...படிக்கும்போதே நம்பிக்கை வருகிறது. நாமும் செய்து தான் பார்போமே...முளைத்தால் முடி....முளைக்காவிட்டால் வழுக்கை. ஆனால் ட்ரை பண்றதுல தப்பே இல்லை. வாருங்கள்....பார்க்கலாம்.

முடி உதிர்வதை தடுக்க

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர:

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக:

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர:

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய:

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.No comments:

Post a Comment