நிறைய கனவுகள் அர்த்தமற்றதாகவே இருந்து விடும். ஆனால் ஒரு சில கனவுகள் மட்டும் விழித்த பின்பும் மறந்து விடாமல், அந்தக் கனவு எனக்கு எதையோ சொல்லியது போன்றதொரு உணர்வை ஏற்படுத்தியது, அது என்னவாக இருக்கும் என்று அன்று முழுவதும் ஆழ்மனத்தில் ஒரு தேடலோடு காத்திருக்கும். அது போலத்தான் அன்றும் என் உள்ளுணர்வு கொடுத்த உந்துதலில் நான் கண்ட கனவின் பலனைக் கண்டறிய இணையத்தில் எனது கனவு சொல்ல வந்ததைத் தேடும் படலத்தைத் தொடர்ந்தேன். இதோ.....நான் கண்ட கனவுக்கு பலனும் கிடைத்தது. இதே போன்று என்றாவது என் போலவே கனவு கண்டு தேடும் பலருக்கோ அல்லது ஒரு சிலருக்கோ....எனது இந்தப் பதிவு உபயோகமாயிருக்கும் என்ற எண்ணத்தில், நான் படித்ததை இணைக்கிறேன். இதைத் தொகுத்தவர்களுக்கு எனது நன்றிகள்.
கனவுகளும் அதன் பலன்களும்
இரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும், 3ம் ஜாமத்தில் கண்ட கனவு 1 மாதத்திலும் அருணோதயத்தில் கண்ட கனவு 10 தினங்களிலும் பலிதமாகும்.
நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன்.
அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம்.
இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்
1. ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும்.
2. இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும்.
3. பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.
4. பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.
5. பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும்.
6. காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று பொருள்.
7. பாம்பு கடித்து ரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம்.
8. கழுத்தில் மாலையாக பாம்பு விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம்
நற்பலன் தரும் கனவுகள்
9. ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.
10. வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.
11. கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.
12. விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு மேலும் பெருகும்.
13. திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.
14,ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.v இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.
15. சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.
16. நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.
17. தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.
18. இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம் ,பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.
19. திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.
20.தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நொருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.
21. உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், பாராட்டு குவியும்.
22.கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும்.
23. ஆமை, மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும், நெஞ்சிலே நிம்மதி பிறக்கும்.
24. மயில், வானம் பாடியை கனவில் கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
25. கழுதை, குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.
26. மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும்.
27. வாத்து, குயிலை கனவில் கண்டால் நம் முயற்சிகள் எளிதில் வெற்றி பெரும்.
28. மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச்செலவுகள் ஏற்படும்.
தீய பலன் தரும் கனவுகள்
29. பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் என நஷ்டம் ஏற்படும்.
30. தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும், குடும்பம் பிரியும்.
31. எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும்.
32.எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும்.
33.இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள்.
34.பசு நம்மை விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு வியாதி சூழும்.
35.புயல் காற்று, சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால் நோய் உண்டாகும்.
36. குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும், செல்வாக்கு சரியும்.
37.நோய் பீடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார்.
38. ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும்.
39. நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும்.
40. முட்டை சாப்பிடுவது கனவு கண்டால் வறுமை பிடிக்கும்.
41. முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும்.
42,சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும்.
43.பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள்.
44.காக்கை கத்துவது போல் கனவு கண்டால் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது
நல்ல கனவு கண்டால் மறுபடியும் நித்திரை செய்யலாகாது. கெட்ட கனவு கண்டால் கடவுளை தியானித்து பிறகு நித்திரை செய்ய வேண்டும்.
இரவில் காணும் கனவுகளுக்கே பலன் தரும் நிலையாகும் பகற்கனவு பலன் தராது
1,)சந்திரனை,சூரியன் பிடிப்பதாகக் கனவு கண்டால்-யோகம் தரும்
2,)பழமரங்கள்,மலைப்பிரதேசம் இவைகளில்-யோகமாகும்
3,)மரங்கள் பழங்கள் அதிகமாக இருக்க மாமரம்,புளியமரம் பாக்குமரம் தென்னைமரம் இவற்றில் காய்களும் நிறைந்திருக்க-செல்வம் சேரும்
4,)எதிலும் ஏறுவதாகக் கனவு கண்டால்-உயர்நிலை பெறுவார்கள்
5,)ஆற்றுநீரை, கடல் அலையைப் பிடிப்பதாகக் கனவு கண்டால்-செல்வம்சேரும்
6,)பெற்றோர்,நண்பர்களை,மக்களைப்பிடிப்பதாக கனவு கண்டால்-புகழ் பெறுவார்கள்
7,)மதுகுடிப்பதாகவும்,தாசிகளுடன் உறவு கொள்வதாகவும் கனவு கண்டால்-மகிழ்ச்சியான காலமாகும்
8,)வெள்ளைப் பட்டு அணிந்த அழகான பெண்ணைக் கண்டால்-செல்வம்சேரும்
9,)அருவருப்பான மனிதர்கள், காகம், மீன், இரத்தம், விலைமாதர் இவர்களைக் கனவில் கண்டால்-செல்வம்சேரும்
10,)இளம் பெண், மாலை அணிந்து வெள்ளை உடை அணிந்து, வாசனைப்பொருட்களை படுக்கையில் அணிந்து, அமர்ந்திருந்தால்-புகழ்பெறும் காலம்
11,)இளம் பெண் தாமரை மலர் ஏந்தி வருவதைப் பார்த்தால்-அதிர்ஷ்டம் வரும் காலம்
12,)காளைமாடு அரசன், பசு,குதிரை,பிடிப்பதாகக் இவைகளைப் கண்டால்-மேன்மை பெறும் குடும்பம்
13,)சேவல்,தரும் ஆபத்து மிருகங்கள்,பெரிய மரம்,பறவை தங்கநிற இவைகளைப் பிடிப்பதாகக் கண்டால்-பெறும் காலம் அதிர்ஷ்டம்
14,)அரசனுடன் இருப்பதாகவும் தேவர்களுடன் பேசுவதாகவும் கண்டால்-உயர்வடையும் நிலையைத் தரும்
15,) வீடு கட்டுவதாகவும்,மரம் நடுவதாகவும், பண்ணை அமைப்பதாகவும் கண்டால் கனவு-புகழ்பெறுவார்கள்
16,)மலர்.தாமரை,வெள்ளைப்,பூமாலை,ஆபரணம் இவைகளைப் பெறுவதாகக் கண்டால்-பெறும்புகழ்பெருவார்
17,)மாம்பழம்,பசு சாணம்,இவைகளைக் கண்டால்-பெறும் காலம் அதிர்ஷ்டம்
18,)பனங்கள் குடிப்பதாகக் கண்டால் கனவு-பெறலாம் லாபம்
19,)காளையை ஓட்டிச் செல்வதாகவும் காரில் தனியாக ஓட்டிச் செல்வதாகவும் குதிரையைச் செலுத்துவதாகவும் கண்டால்-பெறும் அதிர்ஷ்ட காலமாகும்
20,)மிருகங்களுடன் சண்டையிடுவதாகக்கண்டால் அதிர்ஷ்டமான காலமாகும்
21,)பால் குடிப்பதாகக் கண்டால்-சேரும் செல்வம்
22,)பாம்பு கடித்து இரத்தம் வருவதாகவும் நாய்கடித்து இரத்தம் வருவதாகவும் கண்டால்-கனவு அதிர்ஷ்டம் கூடிவரும் காலமாகும்
23,)வெள்ளைநிறப்பாம்பு கையில் கடிப்பதாகக் கண்டால்-சேரும் செல்வம் ஒரு மாதத்திற்குள்
24,)துண்டிக்கப்பட தலை இரத்தம் கொட்டுவதாகக் கண்டால்-சேரும் செல்வபெறுக்கு
25,)இளமைக் காலம் முதுயாவதாகக் கனவு கண்டால்-அதாவது கிழவராவதாக கண்டால் நீண்ட ஆயுள் தரும் வரும் விபத்தால் ஆபத்து நீங்கிவிடும்
26,)திருக்கோவிலை அலங்காரம் செய்வதாகக் கனவு கண்டால்-காத்திருக்கிறது நல்ல அதிர்ஷ்டம்
27,)வெள்ளை பசு,வெள்ளை ஆடை,இவைகளைக் கண்டால்-நிச்சயம் வெற்றி
28,)வீடு எரிவதாகவும் தானியம் சேமிப்பதை கண்டால்-செல்வம்சேரும்
29,)தங்கச்சிலையாக-தான் மாறுவதாகக் கண்டால் கண்டம் விலகிவிடும் புகழ்சேரும்
30,)சாதம், பழவகைகள், ஆறு, கடல், தயிர், பால், நெய், மாங்கனி, சீனிவெல்லம், பாயசம், தண்ணீர்க்குடம், சாமரம், இரத்தம். சமைத்த மாமிசம், இவைகளைக் கையில் பிடித்தாலும் சுவைத்தாலும் வேதம் ஓதுவதைக் கேட்டாலும்-செல்வம் சேரும்
31,)தெய்வம், குரு, சாது, இஷ்ட தெய்வம், நல்வார்தை இவர்களுடன் பேசுவதாகவும், பாம்பு, கடிப்பதாகவும் பூச்சி கடிப்பதாகவும், பெண்களுடன் பேசுவதாகவும் கனவு கண்டால்-விளையும் நன்மை விரைவில்
32,)பணம், சாதம், வெற்றிலை, பாக்கு, தானியம், இவைகளைப் பெறுவதாகவும், சாதத்தை உண்பதாகவும், தான் பால் அபிஷேகம், செய்யப்படு வதாகவும் கனவு கண்டால்- விரைவில் லாபம் பெறுவார்கள்
33,)பிணைக்கைதியாக ஆக்கப்படுவதாகக்தான் கட்டுப்படுவதாக, கண்டால்-தேறிவரும் உடல்நலம்...
தண்ணீர் கனவில் வந்தால் என்ன பலன்
ஒரு இடத்தில் தண்ணீர் இருப்பது போல கனவு கண்டால், பிரச்சனைகள் விலகும். புதிய நண்பர்களால் நன்மை ஏற்படும்.
வறண்ட குளம் இருப்பது போல கனவு கண்டால், புதிய செலவுகள் அதிகம் உண்டாகும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து நல்ல தகவல்கள், பணம் சம்மந்தபட்ட தகவல்கள் வர தாமதமாகும் அல்லது அதில் ஏதாவது தடைகள் உண்டாகும்.
குளத்தில் அதிக தண்ணீர் இருப்பது போல கனவு கண்டால், பெரிய இடத்தில் இருந்து ஆதரவும் அவர்களாலே பல நன்மைகளும் உண்டாகும். வெகுநாட்களாக இருந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.
குளத்தில் தாமரை பூக்கள் இருப்பது போல கனவு கண்டால், பணவரவு உண்டாகும். கடன் சுமை குறையும். நல்ல நல்ல நண்பர்களின் ஆதரவினால் வியபார விருக்தியும் குடும்ப ஒற்றுமையும் ஏற்படும்.
குளத்தில் கால் கழுவுவதை போல கனவு கண்டால், தரித்திரம் விலகி முகதில் புதிய உற்சாகம் ஏற்படும். நாள்பட்ட வியாதிகளால் ஏற்பட்ட பணவிரயமும், உடல் பலவீனமும் அகலும். ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி செல்வீர்கள்.
குளத்தில் இருக்கும்போது முதலை உங்கள் காலை பிடிப்பது போல கனவு கண்டால், எடுக்கும் முயற்சியில் வெற்றியை பெறுவீர்கள். இருந்தாலும் சிறிய பிரச்சனைகளையும் தடைகளையும் சந்திக்க நேரும். அதை மனதைரியத்தோடு சமாளித்தால் லாபகரமாக அமையும்.
குளத்தில் குளிப்பது போல கனவு கண்டால், இறைவனால் ஏற்படும் நன்மைகளை யாராலும் தடுக்க முடியாது. உங்களுக்கு கிடைக்கும் நற்பெயரும் வெற்றியும் யாராலும் பறிக்க இயலாது. அடுப்பு கரி வைரமாகும் ஆனால் வைரம் மறுபடியும் அடுப்புகரி ஆகாது. அதுபோல வெற்றியை பெற்ற நீங்கள் தோல்வியை சந்திக்க மாட்டீர்கள்.
தண்ணீரில் தத்தளிப்பது போல கனவு கண்டால், புதியதாக அறிமுகமான நட்பால் சிரமம் ஏற்படும். பணவிரயமும் உண்டாகும். நெருங்கிய உறவினர்களால் மனசங்கடங்கள் இருக்கும். திடீர் தனலாபமும் ஏற்படும்.
அருவியில் இருந்து தண்ணீர் கொட்டுவது போல கனவு கண்டால், பணவரவு இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றமும் பதவி உயர்வும் ஏற்படும். சந்தோஷமான செய்திகள் கிடைக்கும். செல்வாக்கு உயரும்.
தண்ணீரில் உங்கள் வீடு இருப்பது போல கனவு கண்டால், செல்வம் உங்கள் இல்லம் தேடி வரும். உறவினர்களால் தொல்லையும் வீண் அலைச்சலும் ஏற்படும். நண்பர்களால் நன்மையும் பணவரவும் இருக்கும்.
தண்ணீரில் மூழ்குவது போல கனவு கண்டால், குழந்தைகளால் சந்தோஷம் ஏற்படும். பசுவை தேடி கன்று வருவது போன்று எப்போழுதோ செய்த நன்மைகளின் பலன்கள் உங்களுக்கு இப்போழுது கிடைக்கும்.
செடிகளுக்கும், மரங்களுக்கும் தண்ணீர் விடுவது போல கனவு கண்டால், உங்களுக்கு நன்மை செய்யவே பிறந்தவர்கள் போல் சிலர் உங்களை தேடி வந்து உதவுவார்கள். அவர்களால் மனம் குளிர்ச்சியடையும். புதிய முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.
களைப்பாக இருப்பது போல கனவு கண்டால் என்ன பலன்
களைப்பாக இருப்பது போல கனவு கண்டால், வெற்றிக்காக போராடி கொண்டு இருந்த நீங்கள், வெற்றி பெரும் காலத்தின் அருகில் சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்று உணருங்கள். அதற்கான முயற்சிகளை இன்னும் வேகமாகவும் விவேகமாகவும் செய்தால் வெற்றி கனி உங்கள் கையில்.
எல்லோரும் உறங்குவது போல கனவு கண்டால், அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறும் அந்தஸ்துக்கு வருவீர்கள். உயர்வான பலன்களை பெறுவீர்கள்.
பயணம் செய்வது போல கனவு கண்டால் என்ன பலன்
வாகனத்தில் பயணம் செய்வது போல கனவு கண்டால், பொழுதுபோக்கான விஷயங்களில் அதிகம் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். புகழ் மங்கி இருந்தவர்கள் புகழின் உச்சிக்கே போவீர்கள்.
வாகனத்தை தள்ளி கொண்டு போவது போல கனவு கண்டால், பிரச்சனைகளில் இருந்து எப்படி விடுபடுவது என்று தெரியாமல் அவதிப்பட்டு கொண்டு இருப்பீர்கள். உங்களுக்கு உதவ சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் உதவி செய்ய முன் வருவார்கள்.
இரும்பு கனவில் வந்தால் என்ன பலன்
இரும்பை பற்ற வைப்பது போல கனவு கண்டால், உங்களை விட்டு பிரிந்தவர்கள் உங்களை தேடி வருவார்கள். வியபாரத்தில் எதிர்பாராத நன்மையும் லாபமும் ஏற்படும். உங்கள் மனதை மாற்ற சிலர் முயற்சிப்பார்கள். ஆனால் நன்மையுடன் முன்னேறி வரலாம்.
இரும்பை உடைப்பது போல கனவு கண்டால், பல நாட்கள் வாட்டி எடுத்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும். ஆனால் வெற்றி உங்கள் பக்கமே ஏற்படும். சிந்திக்கும் ஆற்றலும், நிதான போக்கும் உண்டாகும். உடன் இருப்பவர்களால் மனநிம்மதி குறையும்.
இரும்பை வாங்குவது போல கனவு கண்டால், எதிர்பாராத சங்கடங்கள் வேலையில் சிரமங்கள் உண்டாகும். பணவிரயம் சந்தோஷம் குறையும். எச்சரிக்கையாக நடந்து கொள்வதே நல்லது.
இரும்பை பிடித்து கொண்டு இருப்பது போல கனவு கண்டால், நீண்ட நாள் நிலுவையில் இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். உங்களுக்கு உதவ பலர் முன்வருவார்கள். பொருளாதர நெருக்கடியிலிருந்து தப்பிப்பீர்கள். கைவிட்டுபோக இருந்த பொருட்களை காப்பாற்றி விடுவீர்கள்.
கனவில் அந்தனனைக் கண்டால் நல்லது. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். தலப் பயணம் மேற்கொள்ள நேரும். புண்ணிய ஆலய வழிபாடு, புனித நீராடல் நிகழும்.
கனவில் அரசனைக் கண்டாலும், அரசரோடு தொடர்பு கொண்டாலும் நல்ல செல்வாக்காகும். மதிப்பும், உயர்வும் உண்டாகும். அரசர் போன்ற பெரும் பதவியில் உள்ளோரைக் கண்டாலும் இப்பலன் பொருந்தும்.
அமைச்சரோடு தொடர்பு கொள்வது போன்றோ அல்லது உரையாடுவது போன்றோ கனவு கண்டால், விரைவில் பதிவை உயர்வு கிடைக்கும். தொழில் துறையில் உள்ளவர்களுக்குத் தொழிலில் இருந்து வந்த தடைகள் விலகும்.
கனவில் அயல் நாட்டவர் தோன்றினால் அயல் நாட்டு வானிகத் தொடர்பு உண்டாகும். அயல் நாட்டிலிருந்து பொருள் வரவு உண்டு!
அயல் நாட்டுத் தூதுவரைக் கனவில் கண்டால், புதியவர் ஒருவரின் தொடர்பு உண்டாகும். தாம் அயல் நாட்டுத் தூதுவராக நியமிக்கப்பட்டது போல் கனவு கண்டால் புதிய தொழிலில் அல்லது புதிய வணிகத்தில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.
அதிசயமான - விந்தையான மனிதரைக் கனவில் கண்டால் தொழிலில் ஏமாற்றங்கள் உண்டாகும். நம்பிக்கை மோசடி உண்டாக வாய்ப்புண்டாகும்.
அறிஞரைக் காண்பது போலவோ, அல்லது அறிஞரோடு உரையாடுவது போலவோ கனவு கண்டால் அறிவுப் பெருக்கம் உண்டாகும்.
காடுகளிலும் மலைகளிலும் வாழக்கூடிய மலைவாசிகள் அல்லது ஆதிவாசிகள் கனவில் தோன்றினால், புதிய புதிய வருமானம் உண்டாகும். பழைய கடன் அடைபடும். நாடோடிகளையும், நரிக்குறவர்களையும் கனவில் கண்டாலும் இப்பலன் பொருந்தும்.
பிறர் ஒரு பொருளை ஏலம் விடுவது போலக் கனவு கண்டால், அவ்வாறு கனவு காண்பவர் வேலையில்லாதவராக இருந்தால் உடனே வேலை கிடைக்கும். அவ்வாறு கனவு கண்டவர் வேலையில் உள்ளவராக இருந்தால் பதவி உயர்வு கிடைக்கும்.
பிறரைத் தான் ஏமாற்றுவது போல் கணவு கண்டால் எதிர்காலம் ஏற்றமுடையதாக அமையும். அவ்வாறு கனவு காண்பவர் வியாபாரியாக இருந்தால், வியாபாரம் ஏற்றம் பெரும்.
ஆடுகளைக் கனவில் காண்பது மிகவும் நல்லது. இவ்வாறு கனவு காண்பவர் ஒரு தொழிலில் ஈடுப்ட்டிருப்பவரானால், அத்தொழிலில் நல்ல முன்னேற்றமும், நல்ல இலாபமும் உண்டாகும். தொழிலில் ஈடுபடாதவராக இருந்தால், இக்கனவைக் கண்டபிறகு தயங்காது தொழ்லில் ஈடுபட்டு நல்ல இலாபம் அடையலாம்.
செம்மறியாடும், வெள்ளாடும் கலந்து நிற்பதைப் போலக் கனவு கண்டால் புத்திரப் பேற்றினை அடையலாம். ஆனால் அக்குழந்தை அற்ப ஆயுளில் மறைந்துவிடும்.
எருதுகளைக் கணவில் காண்பது எதிர்காலம் நன்மையுடையது என்பதனைக் குறிக்கும்.
னவில் எருதுகள் வண்டியில் பூட்டப்பட்டிருந்தால், இருக்கின்ற துன்பங்கள் நீங்கி எதிர்காலம் நன்மையாக அமையும்.
ஓர் எருது, தன்னைத் துரத்தி வருவது போலக் கனவு கண்டாலோ, அல்லது தன்னை முட்டித் தள்ளுவது போலவோ, அல்லது தன்னை முட்டித்தள்ளிக் காயம் உண்டானது போலக் கனவு கண்டாலோ தன்னைத் தாக்க எதிரிகள் தருணம் நோக்கி இருக்கின்றனர் என்பதைக் குறிக்கும்.
மலையை கனவில் கண்டால் என்ன பலன்
மலை ஏறுவது போல கனவு கண்டால், சாதிக்கும் காலம் இது என உணர்ந்து, முயற்சிகளை செய்து வெற்றியும் பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். உடல் நலம் சுகம் ஏற்படும்.
மலையில் இருந்து விழுவது போல கனவு கண்டால், ஏதோ பெரிய ஆபத்து உங்களை நெருங்கி வருவதாக அர்த்தம். எச்சரிக்கையாகவும், புத்திசாலிதனத்துடனும் நடந்து கொண்டால் பாதகத்தில் இருந்து தப்பிக்கலாம்.
மலையை உடைப்பது போல கனவு கண்டால், பிரச்சனைகள் எல்லாம் தவிடுபொடியாகும். நிலையான அந்தஸ்துக்கு வருவீர்கள். உங்கள் செயலில் மந்த நிலை விலகி சுறுசுறுப்பு உண்டாகும்.
புகை கனவில் வந்தால் என்ன பலன்
வீட்டில் சாம்பிரானி புகை போடுவது போல கனவு கண்டால், இல்லத்தில் கஷ்டங்கள் விலகும். தொழில் துறையில் இருந்த கடன்களை அகற்ற நல்ல வழிகள் கிடைக்கும். புதிய நட்பால் மேன்மையும் பழைய நட்பால் சங்கடங்களும் மாறி மாறி ஏற்படும்.
சிகரேட் பிடிப்பது போல கனவு கண்டால், மனதில் நீண்ட காலமாக இருந்த கவலை விலகும். பிரியமானவ்ர்களின் மனசங்கடத்திற்கு ஆளவீர்கள். சுறுசுறுப்பு குறையும்.
நெருப்பு கனவில் வந்தால் என்ன பலன்
நெருப்பு உங்களை சுற்றி எரிவது போல கனவு கண்டால், உடல் பலவீனத்தால் அவதிப்பட்டு இருப்பவர்கள் அந்த பலவீனம் இருக்கும் இடம் தெரியாமல் உங்கள் உடலுக்கு புதிய தெம்பும் பலமும் கிடைக்கும். உங்கள் செயலுக்கு யாராவது இடைஞ்சல் செய்து கொண்டு இருந்தால், இனி அவர்களால் தொல்லைகள் இருக்காது.
நெருப்பை பற்ற வைப்பது போல கனவு கண்டால், முன் கோபத்தால் பெரிய வாய்ப்பை நழுவவிடுவீர்கள். ஆகவே எதற்கும் கோபப்படாமல நிதானமாக சிந்தித்து பேசுவது நல்லது. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல் இருந்தால் லாபத்தை சம்பாதிப்பீர்கள்.
குடும்பத்தில் இறந்துபோன மூத்தோர்கள் கனவில் வந்தால், வீட்டில் திருமணம் போன்ற காரியம் கைகூடும். வீடு தீப்பிடித்து எரிந்தால் அந்தத் தெருவில் அல்லது வீட்டில் அல்லது உறவுகளில் யாரேனும் பெண்ணொருத்தி பூப்பெய்தப் போகிறாள்.
எனது அனுபவத்தில் மேலே சொல்லப்பட்ட ஒவ்வொரு கனவின் பலனும் சரியாகத் தான் இருக்கிறது. இன்னும் வித விதமான கனவுகள் வரலாம். அதன் பலன் இதில் இல்லாமலும் இருக்கலாம். இருப்பினும், சாதாரணமாக நாம் காணும் பல கனவுகளின் பலன்களாக இதன் மூலம் அறிந்து கொள்ளுங்களேன்.
இன்னும் சொல்வார்கள், கனவென்பதே நமது ஆழ்மன எண்ணங்களின் வடிகால் என்று .
அவைகள் தான் கனவுகளாக வந்து போகின்றது என்றும் ஓர் எண்ணம் உண்டு. எது எப்படி இருந்தாலும், கனவுகள் இல்லாத நித்திரை என்பது வெகு சிலருக்கே சாத்தியம்.
தங்கள் கனவுகள் பலிக்க எனது வாழ்த்துக்கள்...!
மரம் நடுவது போல் கனவு வந்தால்
ReplyDeleteவிரைவில் வாரிசு உருவாகும். வம்சம் தழைத்தோங்கும்.
Deleteசிட்டுக்குருவி கடிப்பது போல் கண்டால் என்ன பலன்
Deleteசிட்டுக்குருவி கடிப்பது போல் கண்டால்
Deleteசிட்டுக்குருவி கடிப்பது போல் கண்டாள்
DeleteChittu kuruvi கடிப்பது போல்
DeleteThis comment has been removed by the author.
Deleteபாம்பு வலது காலில் இன்று மாலை ஏறியது.. ஓடி விட்டது.. என்ன ஆகும்.. சொல்லுங்கள்
Deleteபாம்பு வலது காலில் இன்று மாலை ஏறியது.. ஓடி விட்டது.. என்ன ஆகும்.. சொல்லுங்கள்
Deleteபாம்பு வலது காலில் ஏறி இறங்கினால்.. என்ன ஆகும்.. சொல்லுங்க
Deleteமலை ஏறிவிட்டு இறங்கி திரும்பியது போல் கண்டால்
ReplyDeleteமலை ஏறிவிட்டு இறங்கி திரும்பியது போல் கண்டால்
ReplyDeleteவாழ்வில்வெ நல்லவிதமாக வெற்றி அடைவீர்கள்.
Deleteமலை ஏறிவிட்டு இறங்கி திரும்பியது போல் கண்டால்
ReplyDeleteவாழ்வில்வெ நல்லவிதமாக வெற்றி அடைவீர்கள்.
Deleteமுனிஸ்வரன் கோவிலில் அரிவாளால் வெட்டுவதுபோல் கனவில் வந்தார்
Deleteமுனிஸ்வரன் கோவிலில் அரிவாளால் வெட்டுவதுபோல் கனவில் வந்தார்
Deleteகோயில் இடிந்து விழுவது போல் கனவு கண்டால்?????
ReplyDeleteதிருப்பைந்தீழி என்றொரு ஊர் உண்டு.அங்கு சேர்ந்து விளக்கேற்றி வைத்து வேண்டிக் கொண்டு வரவும். மிகவும் சக்தி வாய்ந்த கோயில் . பல தோஷங்களை நீக்கும் அற்புதக் கோயில். அவசியம் செய்யவும். இந்தக் கோயில் சமயபுரம் அருகில் திருச்சி செல்லும் வழியில்....உள்ளது. யாரிடம் கேட்டாலும் சொல்வார்கள்.
Deleteதிருப்பைஞ்ஞீலி.ஞீலி என்றால் வாழை.
Deleteஇரட்டை சூரியணை கணவில் கண்டால்?
ReplyDeleteஉங்கள் வாழ்வில் மிகப்பெரிய உயர்ந்த அதிசயம் நடக்கப் போகிறது. அதிலிருந்து அதிகமான நன்மைகள் பிறக்கும்.
Deleteவாகனம் வாங்குவது போல் கனவில் வந்தால்?
ReplyDeleteவாழ்வில் அதீத சொகுசு நிலையை அடைவீர்கள்.
Deleteகனவு வரகூடாது என்ன பன்ன
Deleteஅவனது கணவில்அவனேஇறந்து பிணவறைக்கு சென்று பின்னர் உயிர்பிழைத்து வந்தால் என்ன அர்த்தம்
ReplyDeleteதங்களது கர்மாக்கள் கழிகிறது என்று அர்த்தம். விரைவில் சுபகாரியங்கள் நடக்கும்.
ReplyDeleteபணம் திருடு போவதாக கனவு கண்டால்
ReplyDeleteஇது போல் கனவு கண்ட மூன்று நாட்கள் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
ReplyDeleteகடன் கேட்போருக்கு பணமாகக் கடன் கொடுத்தால் திரும்ப வராது. நட்பு முறியும்.
சமீபத்தில் எனக்கொரு கனவு:
ReplyDeleteநான் உறங்கி கொண்டிருக்கிறேன் எனது கனவிலும்
நான் உறங்கி கொண்டிருக்கிறேன்...அப்போது
உறக்கத்திலிருக்கும் எனக்கு ஒரு கனவு வருகிறது.
ஆதி சங்கரர், மற்றும் பெரியவா இருவரும் இருக்கிறார்கள்.
ஒரு சதுரமான கல்லில் சில யந்திரங்கள் வரைந்து
படித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதன் அருகில் எல்லாம்
பத்தரை மாற்று பொன் ....தங்கம்....மின்னிக் கொண்டிருக்கையில்..
"பெரியவா" நான் உண்மை...சத்தியம்....ஆதி கடவுள்...என்றெல்லாம்
சொல்ல நான் அந்தக் கனவின் கனவுக்குள் இருந்து எழுந்து அருகில் இருப்பவர்களை எழுப்புகிறேன். யாரும் எழுந்திருக்கவில்லை. மீண்டும் மீண்டும் அரற்றி அலறி சொல்கிறேன். யாருக்குமே செவியில் விழவில்லை....போலும்..நான் இன்னும்
வேகமாகக் கத்தும் சமயம்...நிஜத்தில் அருகில் உறங்கி கொண்டிருந்தவர்கள் எழுந்து...."என்னாச்சு...என்னாச்சு.." என்று கேட்க...கனவு..நான் உறக்கத்தில் ...கனவு கண்டு...என்று சொல்ல அந்த இரவிலும் அவர்கள் குழம்பிப் போனார்கள். நான்
தெளிந்து எழுந்தேன்....ஆம்...."ஸ்ரீலஸ்ரீ மஹா பெரியவா" தான் சாஃஷாத் பகவான்
என்று உள்ளுக்குள் உணர்ந்தவள் அவரே கதி என்று சரணடைய அவரே வந்து
என்னுள் இருக்கும் அறியாமையைத் தட்டி எழுப்பி விட்டு சென்றிருக்கிறார்கள்.
இது கனவல்ல நிஜம்...
வயசு பெண் மற்றும் பெண் குழந்தை இறப்பது,பாடையில் போவது போல கனவு வந்தால் என்ன அர்த்தம்....
Deleteவயசு பெண் மற்றும் பெண் குழந்தை இறப்பது,பாடையில் போவது போல கனவு வந்தால் என்ன அர்த்தம்....
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதங்களது கஷ்டங்கள் பூர்த்தியாகி விட்டது. அதற்கு பரிகாரம் எப்பொழுது வாய்ப்பு கிடைத்தாலும் அனாதையாக இறந்து போனவர்களின் ஈமச்ச சடங்குகளுக்கு உதவி செய்யவும். சனிக்கிழமை தவறாமல் முடிந்ததை தானம் செய்யவும்.
Deleteகாகமும் கருப்பு நிற கோழியும் நெருப்பில் எரிந்து இறப்பது போல் கனவு கண்டால்
ReplyDeleteகாகமும் கருப்பு நிற கோழியும் வீட்டின் அடுப்பில் நெருப்பில் எரிந்து இறப்பது போல் கனவு கண்டால்
Deleteநாய் கடிப்பது போல கனவு கண்டால்
ReplyDelete//Saranya KumariJune 1, 2017 at 11:22 PM
Deleteநாய் கடிப்பது போல கனவு கண்டால்//
உறவினர்கள் சண்டைக்கு வரப்போகிறார்கள் என்று அர்த்தம்.
நாய் கவ்வுவதாக இருந்தால் வேறு அர்த்தம்.
நாய் கவ்வுவது போல கனவு கண்டால் பலன்
Deleteஎன் வீட்டில் நான் ஒருவருக்கு பிரசவம் பார்த்து, அந்த குழந்தையை கையில் ஏந்தினால்?
ReplyDeleteமருத்துவமனையில் உயிருக்குப் போராடும் யாரோ ஒருவருக்கு ஏதோ ஒரு உதவி செய்யவும். வரும் காலங்கள் அற்புதமாக அமையும்.
Deleteகிறிஸ்துவ சவபெட்டியில் உயிருடன் அடைத்து ஆணி அடிப்பது போல் கனவு கண்டல்..
ReplyDeleteமனதிற்குள் ஒளிந்திருக்கும் ரகசியத்தை தனி அறையில் ஒரு சுவற்றிடம் சொல்லி விடவும். ஏதோ ஒரு பாரம் உங்களுக்குள் உறுத்திக் கொண்டு இருப்பது மறைந்து விடும். அதன் பின்பு நல்லவைகள் தானாக நடக்கும்.
Deleteகிறிஸ்துவ சவபெட்டியில் உயிருடன் அடைத்து ஆணி அடிப்பது போல் கனவு கண்டல்..
ReplyDeleteநாய் வலது கையை கடிப்பது போல் கனவு வந்தால்
ReplyDeleteபைரவரின் அருள் கிடைக்கும்..
Deleteஸ்ரீ கால பைரவாய நமஹ என்ற மந்திரத்தை சொல்லி மிளகு விளக்கு ஏற்றி வழிபாடு செய்யவும்.துன்பங்கள் விடுபடும்.
Deleteபிச்சை போடுவது போலகனவு கண்டால்
ReplyDeleteமுடிந்தவரை இயன்றதை தானங்கள் செய்ய வேண்டும்.வாழ்வு சீராகும்.
Deleteஇறந்துபோன என் தாத்தா என் கனவில் வந்தார், அவரை நான் என் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவருடன் பேசிக்கொண்டு அவரை கட்டி பிடித்து அழுதேன் இதற்கு என்ன பலன்?
ReplyDeleteஇறந்துபோன என் தாத்தா என் கனவில் வந்தார், அவரை நான் என் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவருடன் பேசிக்கொண்டு அவரை கட்டி பிடித்து அழுதேன் இதற்கு என்ன பலன்?
ReplyDeleteபெரியவரின் ஆசீர்வாதங்கள் நிறைந்து கிடைக்கும்.நல்லதே நடக்கும்.
Deleteஎனது தாயின் கனவில் நானும் எனது சகோதரியும் புயலில் சிக்கிக் கொண்டதாகவும்...தாய் எங்களைத் தேடி அலைவதாகவும் உடனே மகள் கிடைத்துவிடுவதாகவும்...என்னை வெகு நேரம் தேடியும் கிடைக்கவில்லை..ஆனால் எங்கோ ஒரு இடத்தில் உயிரோடு இருக்கிறான் என யாரோ கூறுவது போலவும் கனவு கண்டு ..விழித்து பயந்து அழுதிருக்கிறார்....இதற்கு என்ன பலன்?
ReplyDeleteமனத்துள் அனாவசியமான எதிர்கால பயங்கள் இருக்கிறது. அது அவசியமில்லாதது. அனைத்தும் நன்கு நடக்கும். நவகிரக வழிபாடு செய்யவும். சனிக்கிழமைகளில் காக்கைக்கு அன்னமிடுங்கள். மன பயம் போகும். (இந்த பயமே பித்ருக்கள் ப்ரீதி இல்லாததால் வருகிறது.என்பதறிக)
Deleteபை காணாமல் பாேவது பாேல் பின் அதை தே டி அலை வதாக கனவு கண்டால்
ReplyDeleteபை காணாமல் பாேவது பாேல் பின் அதை தே டி அலை வதாக கனவு கண்டால்
ReplyDeleteநீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு பதவி உயர்வோ, அல்லது ஒரு நல்ல விஷயமோ முடிவுக்கு வரும்.வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.
Deleteகோவிலில் அர்சகரிடம் திருநீர் பெருவதுபோல் கனவில் வந்தால்?
ReplyDeleteகோவிலில் அர்சகரிடம் திருநீர் பெருவதுபோல் கனவில் வந்தால்?
ReplyDeleteபுராதனமான சிவன் கோவிலுக்கு சென்று வரவும்.....அல்லது குலதெய்வம் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.
Deleteகனவில் அசரிதி ஒலித்தால் . 2 ஆண்டு கலாக ஒரேமாதிரியான புகை படத்தை காமித்து .
ReplyDeleteமுன் பகை விரோதத்தில் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும். பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றவும்.
Deleteஇரண்டு குழந்தைகள் உடல் முழுவதும் மஞ்சள் நிரத்தில் (மஞ்சள் பிடித்துவைத்த விநாயகர்) போல அமர்ந்துள்ளனர் ஆனால் அப்பொழுது மலம் இருந்து விடுகின்றார்கள் இது நான் சாமி அரையில் உறங்கும் பொழுது வந்த கனவு
ReplyDeleteஇது மிகவும் அற்புதமான கனவு. தன லாபங்கள் கூடி வரும். அம்மனின் அருளோடு பொருள் கூடி வரும் காலம்.
DeleteSami aaduvathu pol kanavu kandal
ReplyDeleteSami aaduvathu pol kanavu kandal
ReplyDeleteகுடும்பத்தில் தகராறு வருவதைக் குறிக்கும். அமைதியாக இருக்கவும். வசி வசி வசி மந்திரங்கள் சொல்லி வந்தால் குடும்பம் அமைதியாகச் செல்லும்.
Deleteஅடிக்கடி கடல் கனவில் வந்து கொண்டிருந்தது பெரிய அளவில் கோட்டை கடல் பகுதிகள் பார்க்க புதிய இடம் போல காட்சி தருகிறது.... இந்த மாதிரி ஒரு கனவு வருகிறது
ReplyDeleteகடல் கனவில் வருவது சிறப்பு. மகிவுகள் கூடி வரும். அடிக்கடி ஒரே இடம் வந்தால் அது பூர்வ ஜென்மத்தின் தொடர்பில் வருவது எனக் கொள்ள வேண்டும். மனம் அமைதி பெற கால பைரவ மந்திரம் சொல்லுங்கள். கடலைக் கண்ட போதெல்லாம் "மனோன்மணி தேவதையாக எண்ணித் தொழவேண்டும்.
DeleteMorning 4.30 erukkum
ReplyDeleteSatarday ஜூலை 1
ReplyDeleteஅப்பா இறந்து விட அவரை எரிப்பதற்கு கொண்டு சென்று தீ மூட்டிய பின் உயிர் பெற்று திரும்பி வருவது போல் கனவு கண்டால
ReplyDeleteஒரு துன்பம் மலை போல் வந்து பனி போல் விலகும் என்பதைச் சொல்லும் கனவு இது. பரிகாரம்: கால பைரவர் மந்திரம் சொல்லவும்.
Deleteவயசு பெண் மற்றும் பெண் குழந்தை இறப்பது,பாடையில் போவது போல கனவு வந்தால் என்ன அர்த்தம்....
ReplyDeleteவயசு பெண் மற்றும் பெண் குழந்தை இறப்பது,பாடையில் போவது போல கனவு வந்தால் என்ன அர்த்தம்....
ReplyDeleteவீட்டில் சுப நிகழ்வுகள் குறிப்பாக கல்யாணம் நடைபெறப் போகுது..
Deleteவெள்ளை புடவை அணிந்து கொண்டு கனவு வந்தால்
Deleteகடல் பொங்கி வருவதாக கனவு கண்டால் பலன் உண்டா
ReplyDeleteவாழ்வில் சந்தோஷங்கள் பெருகி வரும் வாய்ப்பைச் சொல்லும் இந்தக் கடல் கனவு
Deleteவாழ்வில் சந்தோஷங்கள் பெருகி வரும் வாய்ப்பைச் சொல்லும் இந்தக் கடல் கனவு
ReplyDeleteஎன் தந்தை பஸ் மோதி இறப்பது போன்ற கனவு வந்தால்
ReplyDeleteசுனாமி வருவது போல் கனவு வந்தால்
ReplyDeleteவீடு இடிந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன அர்த்தம்?
ReplyDeleteகனவில் சீக்கிரம் இறக்க போகிறீர்கள் என்று அப்பா கூறுகிறார் இரண்டு பூனைகளை ஏந்தியபடி தெருவில் நடக்கிறேன் ...இது என்ன பலன் தரும்
ReplyDeleteகனவில் சீக்கிரம் இறக்க போகிறீர்கள் என்று அப்பா கூறுகிறார் இரண்டு பூனைகளை ஏந்தியபடி தெருவில் மரண பயத்தோடு பிழைக்க வழி தேடி நடக்கிறேன் ...இது என்ன பலன் தரும்
ReplyDeleteஐயா
ReplyDeleteநாய் கடிப்பது போல் கனவு வந்தால்
ReplyDelete//venkadesan kJuly 26, 2017 at 3:29 PM
Deleteநாய் கடிப்பது போல் கனவு வந்தால்//
எந்த இடத்தில் கடித்தது என விவரமாக சொல்லவும்.
நாய் கடிப்பது போல் கனவு வந்தால்
ReplyDeleteஉயிர் உள்ளபடியே பாடையில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள் பாம்பு கடித்து கடித்த இடத்தில் இரத்தம் வந்து பெரியமனிதர்கள் நாட்டு வைத்தியம் செய்து பலனில்லாமல் போன பிறகு....இதற்கு என்ன அர்த்தம்?
ReplyDeleteகடித்த இடத்தில் ஒரு சொட்டு இரத்தம் வந்தது அழுகிறேன் என்னை காப்பாற்றுங்கள் என்று பின்பு நாட்டு வைத்தியம் பலனில்லை பின்பு தான் பாடையில் உயிரோடு ஏற்றி கொண்டு செல்கிறார்கள் கனவு கலைந்து விழித்து விட்டேன்
ReplyDeleteநல்ல கனவு. கவலைப்படாதீங்க...!
Deleteohh thank u..
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதந்தை இறப்பது போன்று கனவு..
ReplyDeleteஇறந்தவர்களுக்கு திருமணம் நடப்பது போல் கனவு வந்தால்
ReplyDeleteகடை களவு போவது போல் கனவு கண்டால்
ReplyDeleteவாகனம் திருடு போவதாகக் கனவு கண்டால்..??
ReplyDeleteவீடு இடிந்துவிட்டது போல கனவு கண்டால் பலன் சொல்லுஙகள்
ReplyDeleteவீடு இடிக்கபடுவது போல கனவு கண்டால் பலன் சொல்லுஙகள்
ReplyDeleteen kathali kaluththil thali(mangalyam)-udan ennudan siriththu pesinkondu irukiral.
ReplyDeleteகல்லறை பற்றி கனவு வந்தால்
ReplyDeleteMadam, ஜன்னல் வழியே வந்த பூனையை வெளியே தூக்கி எறிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
ReplyDeleteவெரி நாய் துரத்தி. கடிப்பது போல கனவு அதிகாலையில் கண்டால்
ReplyDeleteவெரி நாய் துரத்தி கையில் கடிப்பது போல அதிகாலையில் கனவு கண்டால்?
ReplyDeleteஎவ்விடத்தில் கடித்தது? விரலிலா (அ) கையிலா? என தெளிவாக கூறவில்லை.
Deleteஎனிடும் 'எதிரிகள் சண்டைக்கு வரப்போகிறார்கள்'. மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும்.
நாவடக்கம், கையடக்கம் தேவை.
அவர்கள் தங்கள் நெருங்கிய உறவினர்களாகக்கூட இருக்கலாம்!?
ReplyDeleteதெரிந்த ஒரு பெண் இறப்பதாகவும் நான் அழுவதாகவும் கனவு கண்டால்?
ReplyDeleteமலம் கழிப்பது போன்ற கனவு வந்தால்?
ReplyDeleteகர்பமாக இருப்பது போல் கனவு, என்ன பலன்?
ReplyDeleteகர்பமாக இருப்பது போல் கனவு, என்ன பலன்?
ReplyDeleteஇரத்த கனவு என்ன பலன்
ReplyDeleteஇரத்த கனவு என்ன பலன்
ReplyDeleteகனவில் நாய் என் கையை நன்றாக கடித்தது அப்புறம் என் கணவர் என்னை மருத்துவமனை அழைத்து சென்று வைத்தியம் பார்ப்பதை கண்டேன்
ReplyDeleteஇதற்கு என்ன பலன்?
நாய் என்னை துரத்தி கடிக்க வருகிறது.. அதை நான் தடுத்து சண்டை யிடும் போது என் இரு உள்ளங்கைகளிலும் அதன் கால் நகங்களால் பிராண்டிவிடுவது போன்று கனவு கண்டால் என்ன பலன்
ReplyDeleteசுமங்கலி ஊறுகாய் தருவதாக கனவு வந்தால் பலன் என்ன சகோதரி,லலிதா மதுரை
ReplyDeleteலஷ்மி கடாக்ஷம் கிடைக்கும். வீட்டில் எப்போதுமே எலுமிச்சம்பழ ஊறுகாய் நீங்களே சுத்தமாகப் போட்டு வைத்திருக்கவும். தினம் உணவில் எலுமிச்சம் ஊறுகாய் சிறிதேனும் சேர்க்க வேண்டும்..இதில் ஒரு அமானுஷமும் அடங்கி உள்ளது.
DeleteAn 81years old sumangali lady (my cousin sister) married for past 63years came in my wife's dream (midnight during sleep) 3 days ago..
ReplyDeleteShe came in a car, gave முறம் to my wife and told " இதை வைத்துக்கொள். நேரம் ஆகிவிட்டது, நான் போறேன்" and she went. That sister died yesterday. In that funeral, my wife after slipping, fell down in the wet floor in the same funeral house and now she is ok,no injuries.
kindly explain what actually that dream means..
PLEASE HELP US
This comment has been removed by the author.
ReplyDeleteஅரசன் உடன் சேர்ந்து கோயில் அலங்காரம் செய்வது போல கனவு கண்டால்
ReplyDeleteயானை துரத்துவது போல் கனவு கன்டால் என்னஅர்த்தம்
ReplyDeleteவெளி நாடு செல்வது பாேல் கனவு வந்தால் என்ன அர்த்தம்
ReplyDeleteஎனது அம்மா கனவில் வெள்ளை ஆடை அணிந்து வருகிறார் இதன் பலன் என்ன?
ReplyDeleteஎன் பிள்ளை இருவரும் தொலைந்துவிடு போல் கனவுகண்டால் என்ன பலன்
ReplyDeleteஸ்ரீ சக்ரம் மற்றும் சூலம் திருடுவது போல் கனவு கண்டேன் அதற்கு என்ன பயன்
ReplyDeleteகனவில் மனநோயாளி அடிப்பது போல் கண்டால் என்ன பலன்
ReplyDeleteபணம் களவு போவது போல் கனவு வந்தால் என்ன பலன்
ReplyDeleteவாழை இலையில் ஒருவருக்கு பரிமாறுவது போல் கனவு கண்டால் என்ன பலன் ?
ReplyDelete
ReplyDeleteபீடம் கரைத்து மொட்டை அடிப்பது போல் கனவு கண்டால்
ஆண் மெட்டி அணிவது போல் வந்தால்
ReplyDeleteகனவில் நிறைய வீடுகள் இடிந்து விழுவது போல் கண்டால் என்ன பலன்
ReplyDeleteவேகமாக ஓடுவது போல கனவு கண்டால் என்ன பலன்
ReplyDeleteஆட்டை நான் கழுத்தில் தெரியாமல் வெட்டுவது போல் கனவு கண்டால்?
ReplyDeleteகண்ணாடி வளையல் அணிவது போல் கனவு வந்தால்
ReplyDeleteவெள்ளை பூரானை மிதித்து நசுக்குவது போல் கனவு.
ReplyDeleteஎனது செருப்பு காணாமல் போவது போல் அடிக்கடி கனவு வந்தால்????
ReplyDeleteilaneer kudipathu pol kanavu kandal enna palan
ReplyDeleteகாய்ந்த பூ கனவில் வருவது நல்லதா?
ReplyDeleteஎன் தாயும் என் விதவை அத்தையும்(என் தந்தையின் சகோதரி) தங்கள் தலை முடி கூந்தலை வெட்டி கொள்வது போல கனவு கண்டால்????
ReplyDeleteதலைமுடி நிறைய பேன் இருப்பதை கண்டு என் அக்காவை அழைத்து காட்டுவதை போல கனவு இரவு 2.28க்கு இதற்கு பலன் என்ன சொல்ல முடியுமா?
ReplyDeleteதலைமுடியில் பேன் இருந்தால் திருமகள் அதிர்ஷ்டம். விரைவில் பல நல்ல நிகழ்வுகள் வீட்டில் நடக்கும்.
Deleteபாம்பு புற்ற மிதிச்சிட்டியே னு இறந்த என் அக்கா சொல்லுவது மற்றும் நாய் பேசுவது போலவும் கனவு கண்டால்
ReplyDeleteராகு தோஷம் பலமாக இருக்கிறது./ வாழ்வில் தடைகளை ஏற்படுத்தும்.தாமதப்படுத்தும். சந்ததியால் நிம்மதி இழக்கச் செய்யும்.இது சூட்சுமம். ராகு தோஷ நிவர்த்தி செய்து கொள்ளவும். தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும். காவல் தருவார்.
Deleteமனைவி+கானமல்+போனது+போல்+கனவு என்ன பலன்
ReplyDeleteவீட்டு நாய் இடது பின்புறம் கடிப்பது போல் கனவு வந்தால்
ReplyDeleteகனவில் ஒருவா் இறந்தது போல் வந்தால்
ReplyDeleteகனவில் ஒருவா் இறந்தது போல் வந்தால்
ReplyDeleteதேங்காய் உடைத்ததும் பூ விழிந்துயுள்ளது அந்த பூ மிகவும் அழகாகா விரிவடைகின்ரது கடைசியில் அந்த பூ எரிந்துவிடுகின்ரது, கருமை நிரம்யுடைய தாழ் பால்யூட்கொன்டு எண்னை பார்கின்ரால் இதன் முழுமையான பலன் புரியவில்லை
ReplyDeleteஎனக்கு ரயிலில் பிரயாணம் செய்வது போல் அடிக்கடி கனவு வருகிறது. ஆனால் மகிழ்ச்சியாகத்தான் பயணிப்பதாய் இருக்கிறது. சில சமயம் விமானத்தில் பயணம் செய்வதாய் வரும். கப்பலில் செல்வதாக வரும். என்ன அர்த்தம் அம்மா?
ReplyDeleteஒரு தாயும் மகளும் இறப்பது போன்று அடிக்கடி கணவு வருகின்றது அதன் அர்த்தம் என்ன
ReplyDeleteDainoser ah தலைல அடிச்சு kolra மாறி கனவு varuthunga..... Ena palan
ReplyDeleteDainoser ah தலைல அடிச்சு kolra மாறி கனவு varuthunga..... Ena palan
ReplyDeleteமாலை நேரம் நடந்துவரும் பாதையில் இறந்த காகத்தை மிதித்துவிட்டேன் ் மிகவும் கவலையாக உள்ளது பரிகாரம் ஏதேனும் உள்ளனவா ...
ReplyDeleteபாம்பு முட்டையிட்டு குட்டி போடுவது போல் கனவு கண்டால் என்ன அர்த்தம் ?சொல்லுங்க பா.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteபாம்பு முட்டையிட்டு குட்டி போடுவது போல் கனவு கண்டால் என்ன அர்த்தம் ?சொல்லுங்க பா.
ReplyDeleteராகுவின் தோஷத்தால் தான் கனவில் பாம்புகள் வரும். அதற்கான பரிகாரங்கள் செய்து விடவும். இல்லையென்றால் சந்ததி அமையாது.இது ஒரு சூட்சும ரகஸ்யம். கேரளாவில் பாம்புமேக்காட்டு மணா என்றொரு இடம் உள்ளது. அங்கு சென்று அவர்கள் சொல்வது போல் செய்து தொழவும். மிகவும் பிரசித்தி பெற்ற சக்தி வாய்ந்த திருத்தலம். அதீதமான ராகு தோஷங்கள் சட்டென நிவர்த்தியாகும்.பாம்புகள் சத்தியத்திற்கு கட்டுப்பட்டவை. கனவால் குறிப்பு உணர்த்துபவை.
Deleteநான் ஏற்றி வைத்த காமாட்சி விளக்கு சற்று நேரத்தில் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. இரவு 11-12 மணி.
ReplyDeleteகனவில் நெருப்பைக் காண்பது சிறப்பல்ல. ஏதோ ஒரு அம்மன் கோவிலுக்குச் சென்று நெய் விளக்கேற்றி வேண்டிக் கொள்ளுங்கள். வரவிருக்கும் துன்பம் விலகும்.
Deleteகனவில் நெருப்பைக் காண்பது சிறப்பல்ல. ஏதோ ஒரு அம்மன் கோவிலுக்குச் சென்று நெய் விளக்கேற்றி வேண்டிக் கொள்ளுங்கள். வரவிருக்கும் துன்பம் விலகும்.
Deleteகனவில் கட்டுக் கட்டாகப் பனம் வந்தால் என்ன பலன்
ReplyDeleteதிடீரென வேலை பளு அதிகரிக்கும்.மனம் அமைதியாக meditation செய்யவும்.
Deleteயாரோ ஒருவருக்கோ அல்லது உங்களுக்கு பரிச்சயமான ஒருவருக்கோ நீங்கள் தக்க சமயத்தில் பேருதவி செய்ய நேரிடும்.அதன் பலன் பெரிது.
ReplyDeleteஅரசன் உடன் சேர்ந்து கோயில் அலங்காரம் செய்வது போல கனவு கண்டால்
Deleteஅரசன் உடன் சேர்ந்து கோயில் அலங்காரம் செய்வது போல கனவு கண்டால்
ReplyDeleteவிரைவில் ஒரு சுப நிகழ்வு தங்களை முன் நிறுத்தி நடக்க உள்ளது. இந்த சுபத்தைக் காட்டிக் கொடுத்ததில் மகிழ்ந்து
ReplyDeleteஒரு நெய் தீபம் ஒரு ஜீவ சமாதியில் ஏற்றி வைக்கவும். (சித்தர்)
எனக்கு கனவில் அடிக்கடி கலவரம் நடப்பதுபோன்ற காட்சிகள்...
ReplyDeleteஒருமுறை என் வீட்டிற்கும் என் பங்காளி வீட்டிற்கும் அடிதடி கம்பு அறிவாளுடன் சண்டையிட கனவு கண்டேன்..
இன்று நகர்ப்பகுதியில் உடன் படிப்பவர்கள் கல்லெறிந்து கலவரம் செய்கிறார்கள்.. இதற்கு அர்த்தம் என்ன தயவு செய்து செல்லுங்கள்...
மனத்தில் நிம்மதியே இல்லை. அதீதமான எண்ணங்கள் மோதி ஒரு insecured நிலையில் இருப்பதை பிரதிபலிக்கிறது.
ReplyDeleteகலவரங்கள் என்பது ராகுவால் வருவது.(நீச்சமடைந்தால்) கனவுகளுக்கும் ராகு வுக்கும் தொடர்பு இருக்கிறது.
ராஹு கால விளக்கேற்றி துர்கையை வழிபாடு செய்யவும். அதே சமயம் பைரவரைத் தொழ ஆரம்பிக்கவும்.
அந்த நேரத்தில் வேறு எந்த நினைவுகளும் இல்லாமல் அமைதியாய் இருக்கவும். இறையுணர்வை உணரவும்.
நல்லதே உண்டாகும்.
This comment has been removed by the author.
ReplyDeleteமிகவும் அபூர்வமான இந்தக் கனவு தங்களின் குருவிடம் இருந்து பரிபூரண ஆசியை பெற்றுக் கொள்கிறீர்கள். மருதாணி.,...செல்வம்..துளசி.....செல்வமும் ஞானமும், இன்னும் என்ன வேண்டும். ? வாழ்வில் இனி அனைத்தும் சுபம் தான்.
ReplyDeleteபித்தளை பாத்திரம் என்பது மிகவும் தூய்மையான உலோகம். தெய்வங்களுக்கும், குரு மார்களுக்கும், பித்ருக்களுக்கும் மட்டும் உபயோகப் படுத்தும் தெய்வீக உலோகம். பஞ்சலோகத்தில் ஒன்றாக அதிக அளவில் சேர்க்கப் படுவது. தங்களின் கனவு மிக மிக நல்ல சகுனத்தைக் குறிக்கிறது. வாழ்க வளமுடன்.
யார் தங்களின் குரு ..காஞ்சி மஹா பெரியவரா? ராகவேந்திரரா? ராமனாரா? வேதாத்ரி மஹரிஷியா? யோகிராம் சூரத்குமாரா ?
Deleteஷீர்டி சாய்நாதரா? ராமக்ருஷண பரமஹம்சரா? வேதாத்ரி மஹரிஷியா? சித்தர்களில் அகஸ்தியரா?
This comment has been removed by the author.
Deleteநன்மை. அம்மாவின் ஆசிகள் உண்டு..! இயலும் பொழுது சென்று வாருங்கள். ஆடி அமாவாசை மிகச் சிறப்பு.
Deleteகணவில் காகம் கூட்டமாக மரத்தில் அமர்ந்து என்னை அமைதியாக வேடிக்கை பார்பது போன்றும் அந்த இடத்தை விட்டு நான் ஒரு வெள்ளை துனி அசைத்து தப்பி பத்திரமாக பயமின்று வெளியேறிது போன்றும் வந்தது...plz...பலன் சொல்லுஙிக
ReplyDeleteகணவில் காகம் கூட்டமாக மரத்தில் அமர்ந்து என்னை அமைதியாக வேடிக்கை பார்பது போன்றும் அந்த இடத்தை விட்டு நான் ஒரு வெள்ளை துனி அசைத்து தப்பி பத்திரமாக பயமின்று வெளியேறிது போன்றும் வந்தது...plz...பலன் சொல்லுஙிக
ReplyDeleteநல்ல பலனைச் சொல்லும் கனவு தான். வரவிருக்கும் பெரிய இடர்களில் இருந்து தங்களின் பக்தி...குறிப்பாக..சூரியன், சந்திரன் இவர்களின் மேல் நீங்கள் வைத்துள்ள பக்தி உங்களை காத்து நிற்கும் என்பதறிக. தினமும், சூரியனை தொழுதல் வேண்டும். சனிக்கிழமைகளில் காகத்திற்கு எள்ளும், அன்னமும் நீரிட்டு உண்ண வைக்கவும். இன்று தை அமாவாசை...மூத்தோர் கடன்கள் சரிவர செய்து வந்தால், குடும்பம் சுபிட்சமாகும் .கனவு நல்ல சகுனத்தைச் சொல்கிறது.
Deleteஒரு இளம் பெண் நிர்வாண கோலத்தில் மலையில் நனைந்து வாகனத்தில் அடிபட்டு இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்
ReplyDeleteதங்களது தடைகள் அனைத்தும் விலகி விட்டது. இனி அனைத்தும் சுபமாகும்.தங்கள் குடும்பத்தில் ஏதோ ஒரு சமயத்தில் துர்மரணம் சம்பவித்திருக்கலாம்.
Deleteஅது....பதிவில் இருந்து வெளியேறும் வேளையிது . செவ்வாய் கிழமை....ராகு காலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். கனவில் ரத்தம் காணும்போது....பரிகாரம் உண்டு.
நன்றி.
This is the evidence of Split Soul Theory. In very rare case, a same soul had taken a little particle in some other soul and the registrations would be the same. The trace of it will shadow with the present life too.Nothing wrong in this. In due course, Some Good Turns would take place for both of you at the same time. The time has come now to show and understand the Cosmic Theory.
ReplyDeleteIn Fact, Dream is nothing but all Akashic Records only. No pariharam for this. Take as This is an indication for good period. Thanks,
இலையை அறுப்பது போல் கனவு கண்டால்
ReplyDeleteஅது எந்த இலை என்பதை பொறுத்து உள்ளது. வெற்றிலை என்றால் வேறு பலன். வேப்பிலை என்றால் வேறு பலன், தென்னம்மட்டை என்றால் ஒரு பலன், வாழையிலை என்றால் ஒரு பலன். மாவிலை என்றால் வேறு பலன். இலையையும் மரத்தையும் கனவில் கண்டால் நல்ல சகுனம் தான்.
ReplyDeleteவாழை மரத்தை கண்டால் சுப நிகழ்ச்சி வரும்..வாழயிலை அறுப்பது போல் என்றால் விரைவில் விருந்து உண்ணும் நிகழ்வு நடக்கும்.
சில கருப்பு எறும்புகள் தங்கள் கூடுக்கு ஒரு சிறிய பூனை இழுக்கின்றன. இந்த கனவின் அர்த்தம் என்ன?
ReplyDeletePolice kanavil vanthal
ReplyDeleteகனவில் என்னுடைய முடி இருப்பதைவிட ... மெல்லியதாகவும் , குறைவாகவும் இருந்தது.. இது நல்லதா ? கெட்டதா ??
ReplyDeleteசிவன்பெருமாள் உணவு ஊட்டிவிடுவது போல் கணவு அதிகாலை வந்து இதன் பலன்என்ன?
ReplyDeleteஇன்னும் என்ன வேண்டும்...அவனருள் பெற்றதை விட.....இனி எல்லாம் நலமே..அதே நேரம் தங்களால் இயன்ற
Deleteஅன்னதானம் அவசியம் செய்யவும். வாழ்வில் மலர்ச்சியும் உயர்வும் நிச்சயம் உண்டாகும்.
This comment has been removed by the author.
ReplyDeleteஎன் கணவர் இறந்து பாடையில் போவது போல கனவு கண்டால்?
ReplyDeleteஉங்கள் கணவருக்கு வேலையில் ஒரு மாற்றம் கிடைக்கும். ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை வரவேண்டும்.
Deleteபூர்வீக சொத்து கிட்டும் பாக்கியம் உண்டு.
அணிகலன்கள் பாட்டி த௫வதாக கனவு கண்டால் ௭ன்ன பலன்
ReplyDeleteபூர்வீக சொத்து கிட்டும் பாக்கியம் உண்டு.
Deleteகனவில் நாய் வலது கை கட்டை விரலை கவ்வி கடித்து ரத்தம் வந்தால்
ReplyDeleteதேய்பிறை அஷ்டமி அன்று....பைரவருக்கு ஒன்பது நெய் தீபம் ஏற்றி வழிபடவும். இது ஒரு புராதன பரிஹாரம். மிகப் பழமையான சிவன் கோவிலில் உள்ள பைரவரைச் சென்று வழிபடவும். நலம்.
Deleteகனவில் எனது கையில் நீளமாக முடி வளர்ந்து தொங்குவதை நானே கலவரத்துடன் காண்கிறேன்.
ReplyDeleteஇரண்டாவது நான் ஆபத்தில் மாட்டிக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறேன் பலன் என்ன?
கண்ணாடி வளையல் அணிவது போல் கனவு வந்தால்
ReplyDeleteரொம்ப நல்லது. சந்தோஷமான விஷயங்கள் விரைவில் நடைபெறும்.
ReplyDeleteஆடு வெட்டப்பட்டு தலை தனி உடல் தனியாக கிடப்பது கனவில் வந்தால்
ReplyDelete